For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவில் வீட்டில் நுழையும் போலீஸ்: போலீஸ் மீது ஆதிகேசவன் மனைவி, மகள் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Aathikesavans wife Shanthi with daughter Anitha Devi

விசாரணை என்ற பெயரில் போலீஸார் தங்களையும், ஆதிகேசவனையும் துன்புறுத்துவதாக ஆதிகேசவனின் மனைவி சாந்திமற்றும் மகள் அனிதா தேவி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 75 லட்சம் மோசடி செய்து, அவரை கொன்று விட்டதாக ஆதிகேசவன் மீது இன்னொரு புகார் வந்துள்ளது.

ஆதி கேசவனின் மனைவி சாந்தியும், மகள் அனிதா தேவியும் தங்களது வழக்கறிஞர் உதயபானுவுடன் செய்தியாளர்களைச்சந்தித்தனர். அப்போது சாந்தி கூறுகையில்,

எனது கணவரின் சொந்த ஊரான சிறுவாடிக்கு சென்று விட்டு காரில் திரும்புகையில், போலீஸார் வழி மறித்துக் கைதுசெய்துள்ளனர். வீட்டில் உள்ள பல பொருட்களையும், வெங்காயம் வெட்டும் கத்தி உள்பட பலவற்றை அள்ளிச் சென்று விட்டனர்.

இந்தப் பொருட்கள் குறித்த பட்டியலை எங்களிடம் போலீஸார் வழங்கவில்லை. விசாரணை என்ற பெயரில் இன்ஸ்பெக்டர்கள்ஜவஹர், முத்துக்குமார் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு நள்ளிரவிலும் வந்து துன்புறுத்துகிறார்கள்.

இரவில் வந்து தகாத வார்த்தைகளைப் பேசி என்னையும் என் மகளையும் கூசச் செய்கின்றனர். நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் தான் போலீசார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

பத்திரிக்கைகளுக்கு தினசரி ஏதாவது பொய்யான தகவல்களை போலீஸார் தருகிறார்கள். பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார் என்று கூறும் போலீஸார் இதுவரை சிறிதளவு பணத்தைக் கூட கைப்பற்றவில்லையே !!.

பலரிடமும் புகார்களை வாங்கும் போலீஸார் ஒரே ஒரு புகாரின் பேரில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

ஆதிகேசவன் தப்பே செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை. குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கவும் இல்லை. ஆனால்போலீஸார் நியாயமாக நடக்க வேண்டும். ஆதிகேசவன் குறித்த அனைத்து தகவல்களும், அவர் என்னவெல்லாம் செய்தார் என்றவிவரங்கள் எங்களுக்குத் தெரியாது.

திமுக தலைவர் கருணாநிதியுடன் அவர் இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அதிமுகவினருடன்இருந்த படத்தை போலீசார் ஏன் வெளியிடவில்லை?. உண்மையில் அவர் ஒரு அதிமுககாரர் தான்.

காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது வழக்கு தொடர்ந்து அதை வேறு திசையில் தற்போது கொண்டு சென்று வருகின்றனர்போலீஸார் என்றார் சாந்தி.

மேலும் ஒரு கொலை புகார்:

இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 75 லட்சம் மோசடி செய்து, அவரை கொன்று விட்டதாக ஆதிகேசவன் மீது இன்னொரு புகார் வந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அபுஷா பீவி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாடம் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் அவர்கூறியிருந்ததாவது:

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா என்ற இடத்தில் நான் வசிக்கிறேன். எனது கணவர் அப்துல் ராப். இவருக்கும்,ஆதிகேசவனுக்கும் கடந்த 1999ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இறால் மீன் பண்ணை வைத்திருந்தார்.செம்மீன்களை ஏற்றுமதியும் செய்து வந்தார்.

எனது கணவரை அணுகிய ஆதிகேசவன், அவரது தொழிளை அபிவிருத்தி செய்ய சில ஐடியாக்களைக் கூறினார். தன்னிடம்வெளிநாட்டு இந்தியர்களின் ரூ. 1,000 கோடி ரூபாய் இருப்பதாகவும், அதிலிருந்து கடன் தருவதாகவும் எனது கணவரிடம்ஆதிகேசவன் கூறினார்.

இதையடுத்து தனக்கும், தனது நண்பர்கள் 20 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி கடன் வாங்க எனது கணவரும், அவரதுநண்பர்களும் முடிவு செய்தனர். இதற்கு ஒப்புக் காண்ட ஆதிகேசவன் கமிஷனாக ரூ. 1 கோடி தர வேண்டும் என்று கேட்டார்.இதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டனர். முதல் கட்டமாக ரூ. 75 லட்சம் பணத்தை ஆதிகேசவனிடம் எனது கணவர் கொடுத்தார்.

சென்னைக்கு வந்து கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறும், அங்கு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கூறிஎனது கணவரை ஆதிகேசவன் அழைத்திருந்தார். இதையடுத்து 2001ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி சென்னைக்கு சென்றார் எனதுகணவர். பின்னர் விருந்து நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக எனக்குத் தகவல் வந்தது.

எனது கணவர் இறந்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி ரூ. 2 கோடிக்கான கிப்ட் காசோலையை ஆதிகேசவன் என்னிடம்கொடுத்தார். ஆனால் அது போலியான காசோலை. அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது. மேலும், சொன்னபடி 100 கோடிகடனையும் அவர் கொடுக்கவில்லை.

எனது கணவர் கொடுத்த ரூ. 75 லட்சம் பணம், அவரது நண்பர்களிடம் வசூலித்துக் கொடுத்த தொகையாகும். இதனால் அவரதுநண்பர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு எங்களிடம் வந்து கேட்டனர். எங்களது சொத்துக்களை விற்று அவற்றைத்திருப்பிக் கொடுத்து விட்டோம்.

வசதியாக வாழ்ந்து வந்த நாங்கள் ஆதிகேசவனால் இப்போது நடுத் தெருவில் நிற்கிறோம். எனது கணவரின் சாவில் மர்மம்இருப்பதாக நினைக்கிறேன். அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று புகால்கூறியுள்ளார் அபுஷா பீவி.

இந்தப் புகாரை தனியாக விசாரிக்கப் போவதாக போலீஸார் கூறியுள்ளனர். ஆதிகேசவன் மற்றும் கூட்டாளி ஜெயவீரனுடன்,அப்துல் ராப் இருப்பது போன்ற படங்களையும் ஆதாரமாக அபுஷா பீவி போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற ஆதி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X