மீனாட்சி மாயம்: மெஸ்மரிசம் மூலம் விசாரிக்கும் சிபிசிஐடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி வழக்கில், அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரிடமும் லை டிடெக்டர் கருவியைத் தவிர,ஆழ்நிலை மனோவசிய முறையில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் பல மாதங்கள் ஆகிறது. இந்த வழக்கில் இதுவரை துப்புஏதும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர்.

இந் நிலையில் மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது சகோதரர் பசுபதி, அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் உறவினர்ரங்கநாதன், மீனாட்சியுடன் பணியாற்றி வரும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் லை டிடெக்டர் எனப்படும் உண்மை அறியும் கருவிமூலம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்திருந்தது.

இதன் முதல் கட்டமாக, நான்கு பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.எச்.ஐ.வி. சோதனை உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நான்கு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள்தொடர்ந்தன.

இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகதிற்குக் கொண்டு செல்லவுள்ளனர்.

அங்கு லை டிடெக்டர் சோதனை தவிர ஆழ்நிலை மனோவசியம் எனப்படும் மெஸ்மரிசம் முறையின் மூலமும் விசாரணை நடத்த சிபிசிஐடிபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சோதனையை நடத்த குளித்தலை குற்றவியல் நீதிபதி ஜோதி அனுமதி வழங்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+