வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 2 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்டவாக்குகளின்படி இரு தொகுதிகளிலும் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

முதலில் காஞ்சியில் திமுகவும் கும்மிடியில் அதிமுகவும் முன்னணியில் இருந்தன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இப்போது அதிமுகவே இரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. காஞ்சியில் 70 சதவீதமும்,கும்மிடிப்பூண்டியில் 76 சதவீத வாக்குகளும் பதிவாயின.

காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காஞ்சிபுரம் தொகுதிகளுக்கானவாக்குகள் பச்சையப்பன் கல்லூரியிலும், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான வாக்குகள் ஸ்ரீராம் பாலிடெக்னிக்கிலும் எண்ணப்பட்டுவருகின்றன.

காஞ்சிபுரம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெற்று வருகிறது. மேஜைக்கு, ஒரு மேற்பார்வையாளரும்,ஒரு உதவியாளரும் உள்ளனர். மொத்தம் 27 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும். கும்மிடிப்பூண்டி வாக்குகள் 14 சுற்றுக்களாகஎண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு ஐந்து நிமிடததிற்கும் முன்னணி நிலவரம் சொல்லப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி இரு இடங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்டுகள், காவல்துறை அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில்ஈடுபடும் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற யாரும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+