சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்
சென்னை:
சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற நிதியாண்டில் ரூ. 10,000 கோடியைதாண்டி சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.
சென்ற 2004-05ம் நிதியாண்டில் இந்தியாவின் சாப்ட்வேர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு,கர்நாடகம் மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களின் பங்களிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கமிஷன் (நாஸ்காம்) சென்ற நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ரூ.78,000 கோடிமதிப்புள்ள சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
இதன்படி இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்த 3 மாநிலங்களின் பங்களிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 60சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பங்களிப்பு 54சதவீதமாக (ரூ. 30,770 கோடி) இருந்தது.
சாப்ட்வேர் ஏற்றுமதியில் சென்ற நிதியாண்டில் அகில இந்திய அளவில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இதன் ஏற்றுமதி 52சதவீதம் உயர்ந்து ரூ. 37,600 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. சென்ற நிதியாண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.10,703 கோடியாகஉயர்ந்துள்ளது. அதாவது40 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 7,621.50 கோடியாக இருந்தது.
ஆந்திர மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதியும் சென்ற நிதியாண்டில் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தின் சாப்ட்வேர்ஏற்றுமதி 62 சதவீதம் உயர்ந்து ரூ. 8,145 கோடியாகியுள்ளது.
சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்த 3 மாநிலங்களின் தலைநகர்களான சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகியவற்றின்பங்களிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2ம் நிலை நகரமான கோவை ரூ. 49 கோடி மதிப்புள்ள சாப்ட்வேரை ஏற்றுமதி செய்துள்ளது. சேலம், சிவகாசி,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரித்து வரும் அளவிற்கு ஹார்டுவேர் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications