எல்லாம் "அம்மா செயல்: மைதிலி, விஜய்குமார்
காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:
அம்மா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றஅதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசும், கும்மிடிப்பூண்டியில் வெற்றி பெற்ற கே.எஸ்.விஜயக்குமாரும் கூறியுள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மா மீதான மக்கள்நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது. இது அவருக்கு கிடைத்த வெற்றி. மக்கள் அம்மாவின் பக்கமே உள்ளனர் என்பதுமீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றார்.
கே.எஸ்.விஜயக்குமார் கூறுகையில், கும்மிடிப்பூண்டி அம்மாவின் கோட்டை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இதுமுதலமைச்சர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாவுக்கு கிடைத்த வெற்றி. அதிமுக தொண்டர்களும் இரவு, பகல் பாராதுஉழைத்தார்கள்
அதிமுக பெற்றிருப்பது மகத்தான வெற்றி. இந்த வெற்றியை முதலமைச்சர் அம்மாவின் பொற் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். அவரதுஉத்தரவுப்படி தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என்றார்.
விஜயகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் அவருக்கு தேர்தல் அதிகாரி சுஜி தாமஸ் சான்றிதழைவழங்கினார்.
அதிமுகவினர் கொண்டாட்டம்:
இரு தொகுதி தேர்தல் வெற்றியை அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள்வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் சரவெடிகளை கொளுத்தியும் சாலைகளில்,பஸ்களில் சென்றவர்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பும் ஏராளமான அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்இடைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications