குடியுரிமை: இங்கிலாந்தில் கடுமையாகும் சட்டம்
லண்டன்:
இங்கிலாந்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்தை கடுமையாக்கஅந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவை சேர்ந்தவர்கள்.இங்கிலாந்தில் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.
இதற்குப் பிறகு இங்கிலாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இங்குகுடியுரிமை பெறுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். கால் பகுதி இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானிலிருந்து இங்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 14,125 பேர்குடியுரிமை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த படியாக சோமாலியாவிலிருந்து 14,115 பேரும்,
இந்தியாவிலிருந்து 13,540 பேரும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 6,370 பேரும், நைஜீரியாவிலிருந்து 6,280 பேரும் குடியுரிமைபெற்றுள்ளனர்.
கடுமையான சட்டம்:
இதற்கிடையே குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெளிநாட்டினரின் வருகைகட்டுப்படுத்தப்படும் என்று இங்கிலாந்து ராணி எலிஸபெத் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றுகையில், இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைமேம்படுத்தும் விதத்தில் வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும். வெளிநாட்டினருக்குஅடையாள அட்டை முறை விரைவில் அமல்படுத்தப் படும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications