மத்திய அரசுக்கு கருணாநிதி நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பரபரப்பான சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று வருகிற 22ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் டெல்லியில் விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓராண்டை நிறைவு செய்துள்ள மன்மோகன் சிங் அரசு குறித்து, கூட்டணிக் கட்சிகளின் கருத்தை அறிவதற்காகஇன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் நதிகள் இணைப்பு, சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், தனியார் துறையில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய மாநில அரசுகளுக்குஅதிகாரம் வழங்குவது ஆகியவை குறித்த பிரச்சனைகளை திமுக தலைவர் கருணாநிதி எழுப்பியதாகத் தெரிகிறது.

காஞ்சி, கும்மிடிப்பூண்டி தேர்தலில் திமுக கூட்டணியின் தோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடின்மையும், கொடுத்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் (குறிப்பாக நதிகள் இணைப்பு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றை),இதனால் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியும் முக்கியக் காரணமாக திமுககருதுகிறது.

இதையடுத்து இந்த இரு திட்டங்களையும், மேலும் இட ஒதுக்கீடு ஆயுதத்தையும் கையில் எடுக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

இன்று நடக்கும் கூட்டத்தில் இந்த 4 அம்சங்களை கருணாநிதி முன்னிருத்தி அவர் பேசியதாகத் தெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திதலைமை வகித்தார்.

இதில் மன்மோகன் சிங், கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜன்சக்தித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், ஜம்மு மக்கள் கூட்டணித் தலைவர் மெஹ்பூபா முப்தி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிதலைவர் சந்திரசேகர் ராவ்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி. பர்தான், டி.ராஜா,புரட்சி சோஷலிஸ்ட் தலைவர் அபானி ராய், பார்வர்டு பிளாக் தலைவர் தேபாப்ரத் பிஸ்வாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இ.அகமது,

மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், சிவ்ராஜ் பாட்டீல், நட்வர் சிங், ப.சிதம்பரம் மற்றும் மூத்தகாங்கிரஸ் தலைவர்களான அம்பிகா சோனி, அகமது படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர்வைகோ அமெரிக்காவில் இருப்பதால் இதில் பங்கேற்கவில்லை.

இக் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயல்பாடு குறித்து தயாநிதி மாறனும், விவசாயத்துறையின்செயல்பாடு குறித்து சரத்பவாரும் விளக்கமளித்தனர்.

கடந்த ஒரு வருடமாக மத்திய அரசின் நிலைப்பாடு சரியில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் குறை கூறி வருகின்றன. இது குறித்துஇக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+