பிளஸ் டூ: இடம் மாறிய எண்கள்- அரசு "சி.டி"யில் பெரும் குழப்பம் !
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அடங்கிய சி.டியில் பெரும் குழப்பம் காணப்பட்டது. 17 மாவட்ட எண்கள், மாறிப் போயிருந்தன.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வுத்துறை இயக்குனரகம் வழங்கிய முடிவுகள் அடங்கிய சி.டிக்கள்பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த சிடியில் பெரும் குழப்பம் காணப்பட்டது. சென்னை முதல் திருச்சி வரையிலான 17 கல்வி மாவட்ட எண்கள் இடம்மாறியிருந்தன. அதாவது ஓசூர் மாவட்ட எண்கள், கிருஷ்ணகிரியிலும், கிருஷ்ணகிரி எண்கள் தர்மபுரி மாவட்டத்திலும் என இடம்மாறி இருந்தன.
கம்ப்யூட்டர் தகவல் மையத்தில் எண்களை சிடியில் பதியும் போது இந்தத் தவறு ஏற்பட்டிருக்கலாம் என தேர்வுத்துறை இயக்குனர்ஜெகன்னாதன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு முடிவுகளின்போது இந்தத் தவறு நேராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.
சிறப்புத் தமிழ் பாடத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி தங்கலட்சுமி முதலிடம் பிடித்துள்ளார்.
தூத்துக்குடி ஹோலிகிராஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் தங்கலட்சுமி. இவரது தந்தை குமரேசன் மில் தொழிலாளி,அம்மா சேர்மத் தங்கம் குடும்பத் தலைவி.
சிறப்புத் தமிழ் பாடத்தை தேர்வு செய்து படித்த தங்கலட்சுமி அதில் 200க்கு 181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயேமுதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து தங்க லட்சுமி கூறுகையில், தமிழ் என்றால் எனக்கு உயிர். அதனால்தான் சிறப்புத் தமிழைத் தேர்வு செய்து படித்தேன்.நான் மாநிலத்திலேயே முதலிடம் வருவேன் என்று எதிர்பார்த்தேன். அதேபோல வந்துள்ளேன்.
எனது பொழுதுபோக்கே, சிலப்பதிகாரம், வரலாறு, தமிழ் சம்பந்தமான நூல்களைப் படிப்பதுதான். அந்த அளவுக்கு தமிழ் மீதுமிகுந்த ஆர்வம் எனக்கு உண்டு. அடுத்து, ஆசிரியர் பயிற்சியை முடித்து நல்ல ஆசிரியையாக விளங்க ஆர்வமாக உள்ளேன்என்றார் தங்கலட்சுமி.
அக்கரைப்பேட்டையில் 92 % பாஸ்
சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் டூதேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியாக பிளஸ் டூ தேர்வுநடத்தப்பட்டது. இந்தப் பகுதிகளில் 78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது சுனாமிக்குப் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்தை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தியதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தங்களது குடும்பத்துக்கு சிறிய மகிழ்ச்சியைத் தந்துள்ளனர்.
பிளஸ் டூ முடிவுகள்: 76.6% தேர்ச்சி- நாமக்கல், சென்னை மாணவிகள் முதலிடம்












Click it and Unblock the Notifications