வான்கோழி பிரியாணி உண்ட 25 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்யாணத்தில் மிச்சமான வான்கோழி பிரியாணியை சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள்அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே உள்ள மறைமலை நகரைச் சேர்ந்த சிலர் சைதாப்பேட்டை சாத்துமாநகரில் உள்ள கல்யாண மண்டபத்தில் சாப்பாடுபரிமாறுவது, மண்டபத்தை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்குவான்கோழி பிரியாணி போடப்பட்டது.

வரவேற்புக்குப் பின்னர் மண்டபத்தைச் சுத்தப்படுத்திய ஊழியர்கள், மீதமிருந்த வான்கோழி பிரியாணியை தங்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் காலையில் அதை வீட்டினருடன் சாப்பிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.

ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டது, சிலர் மயக்கமடைந்தனர். மொத்தமாக 25 பேர் வாந்தி,பேதி, மயக்கமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரியாணி கெட்டுப் போனதால் விஷத்தன்மை ஏற்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+