சேது சமுத்திரத் திட்டம்: அடுத்த மாதம் அடிக்கல் நாட்டு விழா
சென்னை:
சேது சமுத்திரம் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டுகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கை காரணமாக, இத் திட்டம் விரைவு பெற்றுள்ளது.
இதற்கிடையே டெல்லி சென்றிருந்த கருணாநிதி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தியுள்ளேன். முதல் கட்டமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களை புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் இணைக்கவேண்டும். அதன் பின்னர் மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வட நகரங்களையும் இணைக்க வேண்டும்.
இந்தத் திட்டம் செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தாலும் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, பொருத்தமானதாக அமையும்.இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சோனிய ாகாந்தி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடம்வலியுறுத்தியுள்ளேன். இத் திட்டத்தை நிச்சயம் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்கள். சேது சமுத்திர திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டுள்ளதோஅதுபோல இத்திட்டமும் நிறைவேற்றப்படும்.
வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக கேள்விப்பட்ட நான், அக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம்குறித்து விவாதிக்குமாறும், ஒப்புதல் பெறுமாறும் தம்பி டி.ஆர்.பாலுவிடம் கூறினேன்.
நானும் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசினேன். இதையடுத்து நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சேதுசமுத்திரம் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இத் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுவிடும். இத் திட்டத்திற்கு ஒப்புதல்கிடைத்துள்ளதன் மூலம் தமிழர்களின் நூற்றாண்டுக் கனவு நிறைவேறப் போகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து என்னுடன் சோனியா காந்தி ஏதும் பேசவில்லை. அந்தத் தேர்தலில் எங்களது கூட்டணி மாபெரும்வெற்றி பெறும் என்றார் கருணாநிதி.
லாலு விவகாரம் தொடர்பாக கருணாநிதியிடம் கேட்டபோது, கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது,ஒன்றும் கெட்டுப் போய் விடாது என்றார்.
இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல்












Click it and Unblock the Notifications