குடியரசுத் தலைவர் கலாம் இன்று ரஷ்யா புறப்பட்டார்
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 2 வார சுற்றுப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் அவரை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2 வார சுற்றுப்பயணம்செல்கிறார். இதற்காக இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரைபிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
மாஸ்கோவிலுள்ள ஏவுகணை தயாரிப்பு மையம், ராணுவ ஆராய்ச்சி மையம், விஞ்ஞான மையம், சுகோய் விமான தொழிற்சாலைஆகியவற்றை அப்துல் கலாம் பார்வையிடுகிறார்.
பின்னர் கிரம்ளின் மாளிகையிலுள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
25ம் தேதி வரை கலாம் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ரஷ்யாசெல்வது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்ய பயணத்தை முடித்த பிறகு 26ம் தேதி கலாம் சுவிட்சர்லாந்து செல்கிறார். 27ம் தேதி ஜெனீவாவில் அந் நாட்டுவிஞ்ஞானிகளுடன் அவர் உரையாற்றுகிறார். அன்று சுவிட்சர்லாந்து நாட்டு ஜனாதிபதி அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்கிறார்.
29ம் தேதி கலாம் ஐஸ்லாந்து செல்கிறார். இந்தியாவிலிருந்து ஐஸ்லாந்துக்கு கூடுதல் விமானப் போக்குவரத்து இயக்குவது குறித்தஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுகிறார்.
இதன் பிறகு ஜூன் 1ம் தேதி கலாம், உக்ரைன் செல்கிறார். அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர், 3 ஒப்பந்தங்களில்கையெழுத்திடுகிறார்.
இரு வார சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூன் 4ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications