பிரதமருக்கு கருணாநிதி வாழ்த்துக் கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று இன்று 1 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி பிரதமருக்கு கருணாநிதி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெறுகிறது.இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறிப்பாக கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. வேலை வாய்ப்புகள் போன்றவை பெருகியுள்ளன.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாமாண்டு ஆட்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததை நான் மனமார பாராட்டுகிறேன்.
வரும் ஆண்டுகளிலும் உங்கள் ஆட்சி வளர்ந்து உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன் என்று கடிதத்தில் கருணாநிதிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications