பாப்பாபட்டி: நடைபயணம் ரத்து -கிருஷ்ணசாமி
சென்னை:
போலீஸ் அனுமதி கிடைக்காததால், பாப்பாட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய 3 ஊர்களில் நடத்தத் திட்டமிட்டிருந்தநடைபயணத்தை ரத்து செய்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்படும்பஞ்சாயத்துத் தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்வதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி 23ம் தேதி நடைபயணம் தொடங்கப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஅறிவித்திருந்தார்.
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளாக இந்த தலித்பஞ்சாயத்துக்களுக்கு தலைவர் இல்லை. இந்தக் கிராமங்களில் அனைத்து ஜாதியினரும் நல்லிணக்கத்துடன், ஒற்றுமையாக வாழவேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். அதை வலியுறுத்தித் தான் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன்.
ஆனால் போலீஸார் தடை விதித்துள்ளதால் அந்த பயணத்தைக் கைவிடுகிறோம். இருப்பினும் ஒரு வாரத்திற்குள்நடைபயணத்திற்கு போலீஸார் அனுமதி தர வேண்டும். இல்லாவிட்டால் தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வோம்.
நான்கு தலித் பஞ்சாயத்துக்களிலும் தேர்தல் நடத்தக் கோரியும், அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் கம்யூனிஸ்ட்தலைவர்கள் மதுரையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அது தேவையற்றது. அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச்சென்று இரு தரப்பினரிடம் பேசி சமரசத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications