குமரி மாவட்டத்தில் தொடரும் கடல் கொந்தளிப்பு: 1400 குடும்பங்கள் வெளியேறின
நாகர்கோவில்:
![]() |
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 3வது நாளாக பல இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் அங்கு மக்களிடையேதொடர்ந்து பெரும் பீதி நிலவுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் மக்களிடையேபெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இம்மாவட்டத்தின் இரயுமன்துறை, தூத்தூர், பூத்துறை, சின்னத்துறை உட்பட 30க்கும்மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் பயங்கர கடல்கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியது.
ராட்சத அலைகள் 20க்கும் மேற்பட்ட கடலோர மீனவர் கிராமங்களுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள்அலறியடித்து ஓடினர். கட்டு மரங்கள், வள்ளங்கள், பிளைவுட் வள்ளங்கள் ஆகியவை கடலில் இழுத்துச் செல்லப்பட்டன.லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.
நேற்று இரண்டாவது நாளாக மேலும், 20 கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கடல் பகுதியில் அதிக அளவில் கொந்தளிப்புகாணப்பட்டது. அலைகள் 40 அடிக்கும் உயரமாக எழும்பின. கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் கடலோர கிராமங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
அதே போல கேரளாவின் திருச்சூர், கண்ணூர், எர்ணாகுளம் பகுதியிலும் பல இடங்களில் கடரோல கிராமங்களில் நேற்று கடல்நீர்புகுந்தது.
கடந்த 2 நாட்களாக கடல் அலையின் சீற்றத்தால் பெரும் அச்சத்தில் இருந்து வந்த இப்பகுதி மக்களுக்கு இன்றும் துன்பமாகவேவிடிந்தது. இம்மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிக அளவில் காணப்பட்டது.
இதனால் இப்பகுதியில் இருந்தும் ஏராளமான குடும்பங்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை இப்பகுதியில் இருந்து சுமார்1400 குடும்பங்கள் வெளியேறி விட்டன. இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டமக்களுக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடல் சீற்றம் குறித்து கலெக்டர் சுனில் பாலிவால் இன்று கூறுகையில், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடல்கொந்தளிப்பாக இருந்து வருகிறது. இன்றும் பல இடங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலோர பகுதியிலுள்ள 1395 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இந்தியா வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் குமரிமாவட்டத்திற்கு வர வாய்ப்பில்லை என்றார்.
இந் நிலையில் நாளை (திங்கள்கிழமை) பெளர்ணமி தினம் என்பதால் அலைகளின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கிராமமக்கள்அச்சம் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று கிராம மக்கள் அச்சத்துடன்கூறுகிறார்கள்.
பெளர்ணமி தினத்தையடுத்து கடற்கரை பகுதிகளில் வசிக்கும் ஏராளமான கிராம மக்கள் அங்கிருந்து நீண்ட தொலைவுக்கு சென்றுவருகிறார்கள்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கப் போக முடியவில்லை. இதனால் அவர்களது இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நாளை (திங்கள்கிழமை) பெளர்ணமி தினம் என்பதால் அலைகளின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கிராமமக்கள்அச்சம் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று கிராம மக்கள் அச்சத்துடன்கூறுகிறார்கள்.
பெளர்ணமி தினத்தையடுத்து கடற்கரை பகுதிகளில் வசிக்கும் ஏராளமான கிராம மக்கள் அங்கிருந்து நீண்ட தொலைவுக்கு சென்றுவருகிறார்கள்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கப் போக முடியவில்லை. இதனால் அவர்களது இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் நில நடுக்கம்:
இந் நிலையில் அந்தமானில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.5ஆக பதிவாகியிருந்தது.இந்த திடீர் நில நடுக்கத்தால் அந்தமானில் பீதி ஏற்பட்டுள்ளது.
குமரியில் இன்றும் கடல் கொந்தளிப்பு!: மேலும் பல கிராமங்களில் புகுந்த கடல்













Click it and Unblock the Notifications