பீகார் சட்டசபை கலைப்பு: லாலு வரவேற்பு- பாஜக கண்டனம்
டெல்லி:
பீகார் சட்டசபை நேற்றிரவு கலைக்கப்பட்டது. அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை மத்திய அமைச்சர்லாலு பிரசாத் வரவேற்றுள்ளார்.
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.லாலு எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இந் நிலையில் பீகார் சட்டசபையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது என பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்நேற்றிரவு கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தற்போது ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மத்திய அமைச்சரவையின் முடிவு உடனடியாகதெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பீகார் சட்டசபையை கலைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
பீகார் சட்டசபை கலைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத்வரவேற்றுள்ளார். இது மிகவும் சரியான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது. பீகார் சட்டசபை கலைக்கப்பட்டது ஒரு ஜனநாயக படுகொலையாகும் என்றுஅக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications