இடைத் தேர்தல் தோல்வியால் சேது சமுத்திரத் திட்டம் அறிவிப்பு: பாஜக
சென்னிமலை (ஈரோடு):
சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தவுடன், சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள் என்று தமிழகபாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு வந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பு, தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக தேர்தல் ஒழுங்காக நடைபெறும் என்று திமுகதலைவர்களும், கூட்டணித் தலைவர்களும் கூறி வந்தனர்.
இதைப் பார்க்கும் போது திமுகவினர் என்னவோ பணத்தையே செலவிடவில்லை என்பது போல இருக்கிறது. இடைத் தேர்தல்முடிவையடுத்துத் தான் சேது சமுத்திரத் திட்டத்தை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் அவர்கள் தமிழக நலனுக்காக எதையும் செய்யாமல் உள்ளனர். இதற்குக்காரணம் இருக்கிறது. வருகிற பொதுத் தேர்தலில் ஜெயித்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செய்து கொள்ளலாம் என்று அவர்கள்காத்திருக்கிறார்கள். தமிழக நலன் அவர்களுக்கு முக்கியமல்ல. ஆட்சியைப் பிடிப்பது தான் முக்கியம்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் பாஜக யாருடனும் கூட்டணி சேராது, கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்தே போட்டியிடுவோம்.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பின்னர் எங்களை முறைப்படி அணுகினால் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார்ராதாகிருஷ்ணன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications