பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்: ராமதாஸ், திருமாவளவன் கைது
சென்னை:
சென்னையில் பிறமொழிப் பெயர்ப்பலகைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்படஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
வணிக நிறுவனங்களில் தமிழ் அல்லாத பிற மொழிப் பெயர்களை அழிக்கும் போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன்ஆகியோர் தலைமையிலான தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று சென்னையில், அரசுத் தலைமை பொது மருத்துவமனை எதிரே உள்ள மேயோ ஹால் பகுதியில், ராமதாஸ், திருமாவளவன்,பழ.நெடுமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில்இருந்த கடைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், ஆங்கில விளம்பரப் பலகைகளிலும் கரி பூசிஅழித்தனர். இதையடுத்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி ராமதாஸ்,நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரும், கடலூரில் 500க்கும்மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். வேலூர்,கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications