நாய்கள் சண்டை: வாக்கிங் சென்றவரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ மேஜர் கைது
சென்னை:
தனது வீட்டு முன் நாயுடன் வாக்கிங் சென்றவரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற ராணுவ மேஜரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது அண்ணாஜி நகர். இப்பகுதியின் 3வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மேத்யூ. 72வயதாகும் இவர் ராணுவத்தில் மேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்பகுதி நலச் சங்கத்தலைவராக இருந்தவர். பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக சங்கத் தலைவர் பதவியை விட்டு நீக்கப்பட்டவர்.
இதே பகுதியில் 2வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மணிவண்ணன். ஸ்பிக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சவுத் இண்டியன்கார்ப்பரேஷன் ஏஜென்சியில் மூத்த கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
நாய்கள் சத்தத்தைக் கேட்ட மேத்யூ, வீட்டை விட்டு வெளியே வந்து மணிவண்ணனை சப்தம் போட்டுள்ளார். நாயை ஏன் என் வீட்டு முன்புகொண்டு வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மணிவண்ணன், நான் என் நாயுடன் வாக்கிங் போவதற்கு உங்களிடம் பெர்மிஷன் வாங்கவேண்டுமா என்று கோபமாக கேட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆவேசமாக வீட்டுக்குள் சென்ற மேத்யூ ரிவால்வரை எடுத்து வந்து மணிவண்ணனை நோக்கிச்சுட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் வேகமாக விலகவே, அவரது நெஞ்சில் பாய வேண்டிய குண்டு, வலது முழங்கைப்பகுதியில் பாய்ந்து வெளியேறியது.
இதைப் பார்த்து பயந்து போன மேத்யூ தனது வீட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளோர் மணிவண்ணனைமருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் மேத்யூகைது செய்யப்பட்டார். அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த துப்பாக்கி உரிமம் ரத்துசெய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications