சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் சென்னை முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிபிஎஸ்இ பாட முறையிலான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் சென்னை மண்டலம் 90 சதவீத தேர்ச்சியைக் கண்டுள்ளது. தேசிய அளவில்சென்னை மண்டலம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டையூடாமன், அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவு ஆகியபகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் மொத்தம் 32,365 மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதியிருந்தனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 2653 மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படவுள்ளது.அந்தமான், கல்பாக்கம், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள 13 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் 6ம் தேதி இத் தேர்வுமுடிவடைகிறது. இதன் முடிவு அடுத்த மாத இறுதியில் வெளியாகும்.
சிபிஎஸ்இ பத்தாவது வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.












Click it and Unblock the Notifications