முன்விரோதம்: 5000 கோழிகள் தீவைத்து எரிப்பு
Subscribe to Oneindia Tamil
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே முன்விரோதம் காரணமாக, கோழிப் பண்ணைக்குத் தீவைக்கப்பட்டது. இதில்5000 கோழிகள் எரிந்து சாம்பலாயின.
போளூர் அருகே உள்ள காந்தளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் குமார் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்தனர்.
முன் விரோதத்தால் கோழிப்பண்ணைக்குத் தீவைத்து, 5000 கோழிகள் கொல்லப்பட்டது போளூர் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications