இன்று நாகை வருகிறார் கிளின்டன்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் இன்று வருகிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளின்டன் ஐநா சபையின் சிறப்பு தூதுவராகவும் இருக்கிறார். எச்.ஐ.வி., கிருமி மற்றும்எய்ட்ஸ் ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்ளவும், தமிழகத்தில் சுனாமியால் பாதித்த பகுதிகளை பார்வையிடவும்கிளின்டன் நேற்று முன் தினம் டெல்லி வந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று கிளின்டனை சந்தித்து பேசினார். இந்தியாவில் சுனாமி நிவாரணநடவடிக்ககைள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் பிறகு கிளின்டனுடன் மத்திய உள்துறை செயலாளர்டுக்கல் மற்றும் மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

பின்னர் கிளின்டன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே கிளின்டன் நிருபர்களிடம் கூறுகையில், சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரப் பணிகள் மிகவும் சிறப்பாகநடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான நிதியுதவியை சர்வதேச சமுதாயமும், மத்திய அரசும் வழங்கியிருக்கிறது.

இந்தப் பணி கடுமையானது என அனைவருக்கும் தெரியும். இந்திய அரசு இந்தப் பணியை சிறந்த முறையில் பாராடத்தக்கவிதத்தில் செய்து வருகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மக்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அந்த மக்களுடன் நேரில் பேசிஅவர்களது யோசனைகள் தேவைகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

இன்று பகல் 1 மணியளவில் கிளின்டன் விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினம்செல்கிறார். அங்கு சுமார் இரண்டரை மணி நேரம் தங்கும் அவர், கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் இங்குள்ள மீனவப் பெண்களை சந்தித்து பேசுகிறார். இப்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 25 மீனவபெண்களுக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கம் சார்பில் சுயதொழில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் சாம்பிராணி, கற்பூரம் போன்ற பொருட்களை தயாரிக்கும் பயிற்சியை பெற்று தினமும் 50 ரூபாய் வரைசம்பாதிக்கிறார்கள். இந்த வருட இறுதிக்குள் 600 பெண்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியை முடித்த 25 மீனவப் பெண்கள் கிளின்டனை இன்று சந்திக்கிறார்கள்.

இதன் பிறகு சென்னை திரும்பும் கிளின்டன், பின்னர் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+