விடுதலைப் புலிகளுக்கு சுனாமி நிதி கிடையாது: கிளிண்டன்
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கென தனியாக சுனாமி நிவாரண நிதி வழங்கப்படமாட்டாது என்று சுனாமி மறுசீரமைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியான பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
நாகப்பட்டனத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனைநடத்திய பின்னர் சென்னை வந்த கிளிண்டன் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் கேட்டுக் கொண்டதற்கிணங்கசுனாமி பாதித்த நாடுகளில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
அங்கு நடைபெறும் மறு சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுவது மட்டுமே எனது வேலை. விடுதலைப் புலிகள்இயக்கத்தினரிடம், சுனாமி நிவாரண நிதி என்று தனியாக தரும் திட்டம் எதுவும் இல்லை.
இலங்கையில் உள்ள அனைவரையும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி என்ற முறையில் ஒரேகண்ணோட்டத்துடன் நான் பார்க்க முடியும் என்றார் கிளிண்டன். பின்னர் அவர் இலங்கை புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக நாகையில் செய்தியாளர்களிடம் கிளிண்டன் பேசுகையில், மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின்கூட்டு முயற்சியால் நிவாரணப் பணிகள், மறு சீரமைப்புப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள தற்காலிகக்குடியிருப்புகளுக்குப் பதிலாக நிரந்தரக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்க உதவுவேன்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் மிகவம் திறமையாக செயல்படுகிறார்கள். அவர்கள் செய்துள்ள பொருட்கள் அற்புதமாக உள்ளன.பாதிப்பு கடுமையாகத்தான் உள்ளது. குழந்தைகள் படித்து முன்னேற அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இந்த மாவட்டத்தின் யங் மேன் (ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்) மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். மனித நேயத்துடன்செயல்பட்டுள்ளார். அவரைப் பாராட்டுகிறேன். நாகைக்கு மீண்டும் வருவேன் என்றார் கிளிண்டன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications