சந்திரமுகி வசனத்துக்கு பாமக எம்.எல்.ஏ. எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சந்திரமுகி படத்தில் வரும் தாழ்ந்த ஜாதிப் பெண் என்ற வசனத்தை நீக்க வேண்டும் என பாமக எம்.எல்.ஏவும், தேவேந்திரஇளைஞர் சங்கத்தின் நிறுவனருமான முருகவேல்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாழ்ந்த ஜாதிப் பெண் என்று கூறுவதை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என திருத்தும்படி படத் தயாரிப்பாளர்ராம்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார் முருகவேல் ராஜன்.
முருகவேல் ராஜன் பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏவாக இருந்தாலும், தேவேந்திர இளைஞர் சங்கத்தை நிறுவி தனித்து செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications