கருணாநிதி பிறந்த நாள்: 2 மாநில முதல்வர்கள் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காகஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சென்னை வருகிறார்கள்.

பிறந்த நாளையொட்டி, 3ம் தேதி காலை அண்ணா அறிவாலயத்திற்குப் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களைசந்திக்கிறார் கருணாநிதி. அப்போது தொண்டர்களும், திமுக பிரமுகர்களும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துகிறார்கள்.

அன்று இரவு அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கருணாநிதி,அன்பழகன், முதல்வர்கள் ராஜசேகர் ரெட்டி, ரங்கசாமி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பிறந்த நாளையொட்டி வான்புகழ் வள்ளுவர் என்ற நூலை கருணாநிதி வெளியிட அதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோபெற்றுக் கொள்கிறார்.

முன்னதாக 2ம் தேதி காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூடுகிறது. இடைத் தேர்தல் குறித்தும், வாக்காளர்பட்டியல் சரி பார்ப்பு குறித்தும், வருகிற பொதுத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய உத்திகள் குறித்தும் இக்கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+