சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல், வன்முறை, பஸ்கள் சேதம்!
சென்னை:
சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகள் கோரிதலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலஸீார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால்ஏற்பட்ட வன்முறையில் 5 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர், சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்குப் பின்னர் கண்ணகி நகர் பகுதிக்கு நிறைய அரசுப் பேருந்துகள் விடப்பட்டன. இந்தந நிலையில்பெருங்குடி,துரைப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடிப்படை வசதி கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் ஊர்வலமாக சென்றுமனு கொடுக்க முடிவு செய்தனர். கண்ணகி நகர் வாசிகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
இன்று காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடையாறிலிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீஸார்அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அடையாறு பஸ் டிப்போ அருகே அவர்களைத் தடுத்து நிறுத்தி கலைந்து போகுமாறு கூறினர்.ஆனால் பொதுமக்கள் தடையை மீறி செல்ல முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது. பொதுமக்களில் சிலர் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் 5 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. மோதலில் 10 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில்ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் செய்துதராதவரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என ஜெயக்குமார் கூறியதால் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டுபொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications