டிடிஎச் விவகாரம்: சன் டிவிக்கு எதிரான மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிடிஎச் எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் முறையை சன் டிவி நிறுவனத்திற்குவழங்கியதை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தூர்தர்ஷன் மூலம் தற்போது டிடிஎச் ஒளிபரப்பு அமலில் உள்ளது. அதேபோல ஜீ டிவியும் டிடிஎச் முறையை செயல்படுத்திவருகிறது. சமீபத்தில் ஸ்டார் டிவி குழுமத்திற்கும், சன் டிவி குழுமத்தின் சன் டைரக்ட் டிவிக்கும் டிடிஎச் முறையை ஒளிபரப்பமத்திய அரசு அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.ஜி.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், சன் டிவி நிறுவனத்திற்கு டிடிஎச் முறையை ஒளிபரப்ப அனுமதி கொடுத்தால், மற்ற தொலைக்காட்சிகள்பாதிக்கப்படும். விதி முறைகளை மீறி இந்த அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறி சன் குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டஅனுமதியை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. மனுதாரர்தனது அச்சம் தொடர்பான சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. யூகமாகவே அனைத்தையும் கூறியுள்ளார். சன் டிவிக்கு டிடிஎச்ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் விளக்கவில்லை. எனவே இந்தமனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+