4 பேர் கொலை: 7 பேருக்கு தூக்குத் தண்டனை
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில், கொலை வழக்கு ஒன்றில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அருகே உள்ள அழுகுமந்திரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசமந்திரி. இவரது தம்பி கிருஷ்ணமந்திரி. இவருடைய மகள் சந்திரா. வேறு குழந்தைகள் கிடையாது. மனைவி ராணி, மாமியார் தத்தி அம்மாளுடன் கிருஷ்ண மந்திரி வசித்து வந்தார்.
ஆனால் அதற்கு கிருஷ்ண மந்திரி மறுத்துள்ளார். பலமுறை கெஞ்சியும் கிருஷ்ண மந்திரி பட்டாவைத் தர மறுத்ததால், ராச மந்திரியும், அவரது மகன்களும் கோபமடைந்தனர். கிருஷ்ண மந்திரியை கொலை செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவு 11 மணியளவில், கிருஷ்ண மந்திரியின் வீட்டுக்கு ராச மந்திரியின் மகன்கள் ஜெயவேலு, கண்ணன், செல்வம் ஆகியோர் சென்றனர். அவர்களுக்கு உதவியாக கோவிந்தன், சேட்டு, சேகர், அன்பு ஆகிய கூட்டாளிகளும் சென்றனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண மந்திரியை சரமாரியாக தாக்கினர். சப்தம் கேட்டு எழுந்து வந்த ராணி, சந்திரா, தத்தி அம்மாள் ஆகியோரையும் அக்கும்பல் சரமாரியாகத் தாக்கியது.இதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போயினர்.
வாணியம்பாடி போலஸீார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் 7 பேரையும் கைது செய்தனர். திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இன்று நீதிபதி மணி தீர்ப்பை வாசித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தபோது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீர்ப்பைக் கேட்டதும், 7 பேரும் கதறி அழுதனர். பின்னர் அனைவரும் வேலூர் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications