சுந்தரேச அய்யர், ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு ஆகியோருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
சங்கரராமனஅ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பேரில் பலர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் அய்யரும், ரகுவும் அடக்கம்.
இதையடுத்து அய்யரும், ரகு உள்ளிட்டவர்கள் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்தஉயர்நீதிமன்றம், அய்யர், ரகு, மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி, சுந்ததரேச அய்யர் விழுப்புரத்தில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும், ரகு,கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்த்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications