முதல்வர்கள் மாநாடு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
23வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு பாண்டிச்சேரியில் இன்று காலை தொடங்கியது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆந்திர மாநிலம் சார்பில் அமைச்சர் ஜனா ரெட்டிதலைமையிலான குழு, கர்நாடகம் சார்பில் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் தலைமையிலான குழு, கேரளா சார்பில் வருவாய்த்துறைஅமைச்சர் கே.எம்.மணி தலைமையிலான குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தவிர மத்திய உள்துறைச் செயலாளற் வி.கே.துக்கல், தமிழக தலைமைச் செயலாளர் நாராயணன், கேரள, கர்நாடக,ஆந்திர மற்றும் புதுவை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டையொட்டி மிக பலத்த பாதுகாப்பு புதுவை முழுவதும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications