ஆடிட்டர் குருமூர்த்திக்கு காஞ்சி. கோர்ட் பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் ஆடிட்டர் குருமூர்த்திக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் குருமூர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் அப்போதையஎஸ்.பி. பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சங்கரராமன் கொலை வழக்கு குறித்து குருமூர்த்தி எழுதியகட்டுரைகள் தொடர்பாக இந்த விசாரணை நடந்தது.

விசாரணை முடிவடைந்த பின்னர், கூடுதல் எஸ்.பி.யும், விசாரணை அதிகாரியுமான சக்திவேல் காஞ்சிபுரம் குற்றவியல்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், விசாரணைக்க குருமூர்த்தி சரியாக ஒத்துழைக்கவில்லை. கேட்ட கேள்விகளுக்குமுறையாக பதில் கூறவில்லை. அவர் தொடர்ந்து இந்த கொலை வழக்கு குறித்து கட்டுரை எழுதி வருவதால் விசாரணைபாதிக்கப்படுகிறது என்று சக்திவேல் கூறியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி உத்தமராஜ், மனுவை விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தஉத்தரவிட்டார். விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 2மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை ஆடிட்டர் குருமூர்த்திக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.ஜூன் 6ம் தேதிக்குள் குருமூர்த்தியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+