மெட்ரிக் பள்ளி விவகாரம்: அரசு உத்தரவுக்கு தடை இல்லை!
சென்னை:
அங்கீகாரம் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மூட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில், எங்களது சங்கத்தில் 1400 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், அரசின் அனுமதி பெற்றும் அதை புதுப்பிக்ககாத்திருப்போர், அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பவர்கள் மற்றும் அரசின்அனுமதியைக் கேட்பதற்காக பள்ளிக் கட்டடம், சுகாதார அமைப்பு ஆகியவற்றுக்கான தரச் சான்றிதழ் கிடைக்காமல்காத்திருப்போர் என 3 நிலைகளில் எங்களது உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் தன்னிச்சையாக பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த 3 முதல் நான்கு ஆண்டுகள் வரை அவகாசம் தரசிட்டிபாபு கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை அரசு புறக்கணித்துள்ளது.
அரசின் தற்போதைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றுமனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ரவிராஜ பாண்டியன் இன்று விசாரித்தார். அப்போது அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
மேலும், அரசின் அனுமதி பெற்றும் அதை புதுப்பிக்க விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு நீட்டிப்பு கிடையாது.
சம்பந்தப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் இதுபோல மொத்தமாக மனு தாக்கல் செய்யக் கூடாது. தனித் தனியாகமனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் நடைபெறும் என்று நீதிபதி தனது உத்தரவில்கூறியிருந்தார்.
மெட்ரிக் பள்ளிகளை மூட இன்றுடன் கெடு முடிகிறது!












Click it and Unblock the Notifications