கொள்கையில் சமரசம் இல்லை: பாஸ்வான்
சென்னை:
எனது கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து பீகார் தேர்தலில்போட்டியிட தயக்கம் ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்திக் கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான்கூறியுள்ளார்.
மீண்டும் மக்களை சந்திக்க லோக் ஜன சக்தி கட்சி தயாராக உள்ளது. இதைத் தவிர வேறு வழியில்லை. பீகார் தேர்தலில் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட நாங்கள் தயார்தான். இருப்பினும் எங்களது கொள்கைகளில் மாற்றம் இல்லை,எதற்காகவும் அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்துவிவாதிக்கவுள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து முன்பை விட வலுவாக உழைப்போம். கொள்கைக்காகத்தான் நாங்கள்போராடுகிறோம். தலித் மக்களும், சிறுபான்மையினரும் பீகார் மாநில பிரச்சினைகள் மட்டும் அல்ல, ஆனால் தேசியபிரச்சினைகள்.
தலித் மற்றும் சிறுபான்மையினருக்ககாக நூறு முறை வேண்டுமானாலும் என்னைத் தியாகம்செய்து கொள்ளத் தயாராகஇருக்கிறேன். அவர்களது உரிமைகளுக்காக அரசு மட்டத்திலும், மேலும் பல்வேறு நிலைகளிலும் போராடுவேன்.
பீகார் முதல்வராக முஸ்லீம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை குறித்து, தேசிய செயற்குழுக் கூட்டத்தில்விவாதித்து முடிவெடுப்போம். முதலில் தேர்தல் தேதிகளை அறிவிக்கட்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாகும் முன்பே, அதில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வரநான்தான் முதல் முயற்சி எடுத்தேன். எனது தமிழக விஜயங்களின்போது திமுக தலைவர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ்ஆகியோரை சந்தித்து கூட்டணியின் உறவை பலப்படுத்தினேன்.
அதேபோல, ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் இடையேயான உறவையும்வலுப்படுத்தினேன் என்றார் பாஸ்வான்.












Click it and Unblock the Notifications