For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மூடல்: மாணவர்கள் தவிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அங்கீகாரம் பெறாத 2000க்கும் மேற்பட்ட நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இன்று முதல்மூடப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளை 31ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிபிறப்பித்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு நர்சரி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசிடம் அங்கீகாரம கோரியும், அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரியும் விண்ணப்பித்தபள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளை மூட உத்தரவிட்டது. அங்கீகாரம் கோரியுள்ளவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம்

கொடுக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு படித்துவரும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பெற்றோர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 3100 ஆகும். இதில் 3.5 லட்சம் மாணவ, மாணவியர்படிக்கிறார்கள். இவற்றில் அனுதிமதியைப் புதுப்பிக்கக் கோரிய பள்ளிகளின் எண்ணிக்கை 1600 ஆகும். அங்கீகாரம் இல்லாதகாரணத்தால் தற்போது 2000 பள்ளிகள் மூடப்படுகின்றன. இவற்றில் 1.25 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

அரசின் புதிய விதிமுறைப்படி, பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஏற்பட 2 ஏக்கர் பரப்பில் பள்ளி அமைந்திருக்க வேண்டும்.வலுவான, நிரந்தர கட்டடம் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு 9 சதுர அடி இடம் கொடுக்கப்பட வேண்டும், 40 குழந்தைகள்படிக்கும் வகுப்பறை என்றால் வகுப்பறை 400 சதுர அடியில் அமைந்திருக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, தீயணைக்கும்கருவிகள், நூலகம், மைதானம், ஆய்வகம் என அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும்.

இந்த வசதிகள் கொண்ட பள்ளிகளுக்குத்தான் அரசு அங்கீகாரம் வழங்குகிறது. கும்பகோணம்தீவிபத்திற்குப் பின்னர் இந்தப் புதியவிதிமுறைகளை மிகவும் கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வசதிகள் இல்லாத காரணத்தால்தான் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்தக்காரணங்களைக் காட்டித்தான் இப்பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது.

தற்போது உயர்நீதிமன்றமும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டதால், இப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படுகின்றன.இதனால் இவற்றில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பீதியில் பெற்றோர் காணப்படுகின்றனர்.

இருப்பினும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவியரை, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கபெற்றோர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோல மாறி வரும் மாணவர்களை சேர்க்கவும், வழக்கமானகட்டணத்தையே வசூலிக்கவும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மறுக்கக் கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X