ஜாமீன் கிடைத்தது: விடுதலை ஆகிறார் ரகு!
சென்னை:
ஆடிடர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுதலை ஆகிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரகு, குண்டர் சட்டத்தின் கீழ் பின்னர் கைது செய்யப்பட்டார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார்.
இதில் சங்கரராமன் கொலை வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இன்று ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதிலும் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு ரகுவுக்கு இருந்தது.
இந்த நிலையில், சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம்,ரகுவை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. நீதிபதி ரோசையா இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில், ரூ. 10,000க்கான இரு நபர் உத்தரவாத ஜாமீனுக்கு, அவரை விடுதலை செய்யலாம் என சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் விடுதலைக்குப் பின்னர் ரகு கோவையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார். சங்கரராமன் கொலை வழக்கிலும் இதே நிபந்தனை ரகுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தடிசம்பர் மாதம் ரகு கைது செய்யப்பட்டார். 7 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் விடுதலையாகிறார்.
ஆடிட்டர் வழக்கு: ரகுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications