செப். 14ல் அரசியல் கட்சி உதயம்: விஜயகாந்த்
சென்னை:
செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறும் ரசிகர் மன்ற மாநாட்டின்போது புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக அரசியலில் குதிக்கப் போவதாக கூறியிருந்த விஜயகாந்த், திடீரென புதன்கிழமை தனது அரசியல் பிரவேசம்குறித்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச்சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் ரசிகர்களும், செய்தியாளர்களும் திரண்டனர்.
மதுரை திருநகர் பகுதியில் 70 ஏக்கர் இடத்தைப் பார்த்து வைத்துள்ளோம். அங்கு மாநாடு நடத்த அரசிடம் அனுமதிகோரியுள்ளோம். அனுமதி கிடைக்காத பட்சத்தில் தமுக்கம் மைதானத் திடலில் மாநாடு நடக்கும் அல்லது ரேஸ்கோர்ஸ் திடலில்நடைபெறும்.
ரசிகர் மன்ற மாநாடாகஇது நடந்தாலும், எனது புதிய அரசியல் கட்சியின் மாநாடாகவும் இது அமையும். புதிய கட்சி குறித்துஅப்போது முறைப்படி அறிவிக்கவுள்ளேன். கட்சிக்குத் தேவையான அனைத்து அணிகளும் அமைக்கப்பட்டு விட்டன. இனிஒவ்வொரு அணிக்கும் தலைவர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
எல்லோராலும் முடியாதது என்னால்தான் முடியும் என்றால் அது நிச்சயம் முடியும். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதானாக நடக்கிறது.எனது ரசிகர்களை பல வகைகளில் சோதித்துப் பார்த்துத்தான் அரசியலுக்கு வருவது என்ற முடிவுக்கு நான்வந்தேன்.
மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. மாநாட்டு மேடையில் என்னோடுயார் அமர்ந்திருப்பார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.
பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. 100இடங்களிலும் போட்டியிடலாம், 5 இடங்களிலும் போட்டியிடலாம், ஏன் அனைத்துத் தொகுதிகளிலும் கூட போட்டியிடலாம்.
டிசம்பரில் தேர்தல் வந்தாலும், அல்லது எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். மலையோடு மோதநான்தயாராகி விட்டேன்.
சென்னையில் தொண்டர் அணிக்குப் பயிற்சி கொடுக்கவுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், ஒன்றியத்திற்குதலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் விஜயகாந்த்.
நேற்றே விஜயகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மாறாக, செப்டம்பரில் தனது கட்சிகுறித்து அறிவிக்கப் போவதாக விஜயகாந்த் கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தைக் கொடுத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications