வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க 17 லட்சம் பேர் மனு
சென்னை::
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டில் கடந்த 3 வாரங்களில் 17 லட்சம் பேர் விண்ணப்பம்அளித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இந்த 3 வாரங்களில் இதுவரை 17 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் அளிக்கப்பட்டுள்ளவிவரங்களை சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்பணியை ஆய்வு செய்ய சென்னையிலிருந்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் 2 அதிகாரிகள் சென்றுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தப் பணி, வெள்ளிக்கிழமையுடன் (இன்று) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முடிவடைந்த முதற்கட்ட ஆய்வுப்பணியின் அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி விட்டோம்.ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இறுதி அறிக்கையும் அனுப்பப்பட்டுவிடும்.
அந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்ட பிறகு மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வந்து இப்பணிகளை மறு ஆய்வுசெய்வார்கள் என்றார் நரேஷ் குப்தா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications