சியோல், ஹாங்காங், சிங்கப்பூருக்கு ஏர்-இந்தியாவின் நேரடி விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

டெல்லி-கோலாலம்பூர் மற்றும் மும்பை-சிங்கப்பூர் இடையே அடுத்த மாதம் முதல் நேரடி விமான சேவையை துவங்க ஏர்-இந்தியாமுடிவு செய்துள்ளது.

ஏர்-இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான துளசிதாஸ் இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம்கூறுகையில், மும்பையிலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்து கோலாலம்பூருக்கு அடுத்த மாதம் முதல்ஏர்-இந்தியா நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

மேலும் மும்பையிலிருந்து டெல்லி வழியாக தென் கொரிய தலைநகர் சியோலுக்கு டெல்லி, ஹாங்காங் வழியாக வாரத்திற்கு 4விமானங்கள் இயக்கப்படும். இதைத் தவிர ஹாங்காங் வரை 3 விமானங்களை இயக்கவுள்ளோம்.

இந்த சேவைகளுக்காக ஏ 310 ரகத்தை சேர்ந்த 3 ஏர்-பஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளோம்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட் ஏர்லைன் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் மேலும் 4 விமானங்களை இயக்க தீர்மானித்துள்ளோம்.

எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் ஏர்-இந்தியாவின் வருமானம் சராசரி அளவில் தான் இன்னும் உள்ளது என்றார்துளசிதாஸ்.

ஏர்-இந்தியாவின் வணிக இயக்குனர் வர்மா கூறுகையில், விமான சேவையை அதிகரிப்பதற்காக மேலும் பல விமானங்களைகுத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம்.

இரண்டு ஏ 310 ரக விமானங்களை சரக்கு விமானங்களாக மாற்றி 2007ம் ஆண்டு முதல் கார்கோ சர்வீஸை தொடங்கவும்தீர்மானித்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+