ஜெயா டிவியில் வெளிநாட்டு பங்குதாரர்கள்- சசியின் பினாமிகளா?: நிதியமைச்சகம் விசாரிக்க திமுக கோரிக்கை
டெல்லி:
ஜெயா டிவியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் உண்மையான பங்குதாரர்களா அல்லது சசிகலா, ஜெயலலிதாவின் பினாமிகளாஎன்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் மனு கொடுத்துள்ளனர்.சசிகலாவின் நிதி பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.
அதில், தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஜெயா டிவியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும்பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.
அவர்கள் யார் என்ற தெளிவான விபரம் இல்லை. அவர்கள் அனைவரும் போலியானவர்களாக அல்லது முதல்வர்ஜெயலலிதாவின் பினாமிகளாக இருக்கலாம். இந்த பங்குதாரர்களில் பலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களாவர்.
இது, செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கான உரிமம் அளிப்பது குறித்து கடந்த 25.7.2000 அன்று மத்திய தகவல் ஒலிபரப்புஅமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகும்.
ஜெயா டிவி நிறுவனத்தின் 6 ஆண்டு கால ஆண்டறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தினால் இந்தகாலகட்டங்களில் அந்த நிறுவனம் பெருமளவு வருமானம் ஈட்டியிருப்பது தெரியவரும்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அந்த நிறுவனத்தின் வருமானம் மிகவும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின்நிதியும் ஜெயா டிவிக்குப் போயுள்ளது.
எனவே ஜெயா டிவி நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதி நிலவரம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய நிதியமைச்சகத்திற்குஉத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் சன் டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பிக்கள் பிரதமரிடம்மனு கொடுத்தனர். இதற்கு பதிலடியாக இப்போது திமுக சார்பில் ஜெயா டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுகொடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications