For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு நவீன ராடார்கள்: மத்திய அரசுக்கு வைகோ கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு - சென்னை:

இலங்கைக்கு நவீன ராடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கு கடும்கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக உடன்பாடு செய்து கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் நட்வர் சிங்கை சந்தித்து பேசிய பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், 3 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் அந்நாட்டின்வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமரை சந்தித்து பேசினார்.

பின்னர் நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்குப் பிறகு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கதிர்காமர் கூறுகையில், இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது.

இதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நவீன ராடார், ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்குவிற்பனை செய்ய இந்தியா ஆர்வமாக உள்ளது.

வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்குவது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது. இவற்றைவாங்குவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். ஆனாலும் இதற்கு காலக்கெடு எதுவும் நாங்கள் நிர்ணயிக்கவில்லைஎன்றார் கதிர்காமர்.

நட்வர் சிங் கூறுகையில்,

இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும்போதுசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும்.

கல்வி மற்றும் சிறிய திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளும் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கையில் 20மின்னணு நூலகங்களை அமைக்கும் முன்னோடி திட்டத்திற்கு இந்தியா ரூ.1 கோடி உதவி அளிக்க முன் வந்துள்ளது.

மேலும் 450 இலங்கை போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரனிலுடன் சந்திப்பு:

இதற்கிடையே நட்வர்சிங் இன்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போதுஇருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள்குறித்தும் இருவரும் விவாதித்தாக ரனில் விக்கிரமசிஙகேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நட்வர் சிங் இன்று இந்தியா திரும்புகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அவர்,இலங்கையின் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார்.

வைகோ கடிதம்:

இலங்கைக்கு ராடார் சாதனம் மற்றும் ஆயுதங்களை வழங்கக் கூடாது என்று வைகோ, பிரதமரிடம் பலமுறை வலியுறுத்தி வந்தார்.இந் நிலையில் இலங்கைக்கு ராடார் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இதைத் தொடர்ந்து வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கைக்கு நவீனராடார்கள் மற்றும் மற்றும் ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் கூறியதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அது இந்தியா எடுக்கும் மிக மோசமானநடவடிக்கயாைக இருக்கும்.

கடந்த 1995 மற்றும் 1998ம் ஆண்டில் இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சில் ஏராளமான அப்பாவி தமிழர்கள்இறந்தார்கள். இந்த சூழ்நிலையில் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்தால் அது இலங்கையிலுள்ள அப்பாவிதமிழர்களுக்கு மிகப் பெரும் இன்னல்களை கொடுக்கும்.

எனவே இரு நாட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் அளித்தால் அது உலக தமிழர்களுக்குபெரும் வருத்தத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X