"ரஜினியை பின்பற்றுங்கள்: நடிகர்களுக்கு ராமதாஸ் "அட்வைஸ்
சென்னை:
இனிமேல் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதற்காக நடிகர் ரஜினிகாந்தைபாராட்டுகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சினிமா தான்என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போது வெளிவரும் படங்களில் நான்கில் 3 பங்கு சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் தான் முக்கியமாக இடம்பெறுகிறது. ஒரு காலத்தில் வில்லன் மட்டும் தான் புகைப்பிடிப்பார். இப்போது கதாநாயகர்கள் தான் அதிகமாகபுகைப்பிடிக்கிறார்கள். இதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
எனவே தான் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள். கதாசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கற்பனை சுதந்திரத்திற்கு தடை போடுவதாக மத்தியஅரசின் நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது என்று தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
கதாசிரியர்களும், தயாரிப்பாளர்களும் தங்களது கற்பனையை வளர்த்துக் கொள்ள எவ்வளவு வேண்டுமானாலும் புகைத்துக்கொள்ளட்டும். ஆனால் சினிமாவில் அந்த காட்சிகள் வேண்டாம்.
ரஜினிகாந்தை பின்பற்றுங்கள்:
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளிவந்த சந்திரமுகி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. இதுஆறுதலான விஷயம். இனிமேல் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
இதற்காக நண்பர் ரஜினிகாந்தை நான் மிகவும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். மற்ற நடிகர்களும் ரஜினிகாந்தை பின்பற்றவேண்டும். சமுதாய நலனில் அக்கறையுள்ள தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளைஎடுப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதெல்லாம்நல்ல அறிகுறிகள்.
எனவே வருங்கால சந்ததியினர் நலனை கருத்தில் கொண்டு திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்.கற்பனை சுதந்திரத்தை நல்லவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications