இலங்கை: சந்திரிகா கட்சி அரசுக்கு ஜேவிபி ஆதரவு வாபஸ்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரப் பணிகளை மேற்கொள்வதைக் கண்டித்து, சந்திரிகாவின் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்தஆதரவை ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வாபஸ் பெற்றுள்ளது.
இதனால் அதிபர் சந்திரிகாவின் கூட்டணி அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவு இருப்பதால் குறைந்தபட்ச பெரும்பான்மைஉள்ளது.
புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய சந்திரிகாவுக்கு ஜேவிபி நேற்று நள்ளிரவு வரை கெடு விதித்திருந்தது. ஆனால்,சந்திரிகா தனது நிலையை மாற்றிக் கொள்ளாததால் தனது ஆதரவை இன்று வாபஸ் பெற்றதாக ஜேவிபி கூறியுள்ளது.
முதலில் புலிகளுடன் கைகோர்க்க மறுத்து வந்த சந்திரிகா, சர்வதேச நெருக்குதல் காரணமாவே இணைந்து செயல்பட முன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையை இழந்தாலும் சந்திரிகாவின் கட்சி அரசைக் கவிழ்ப்பதில்லை என்ற முடிவில் ரணில் விக்கிரமசிங்கே உள்ளார். இதனால் அவரது கட்சி இந்தவிவகாரத்தில் சந்திரிகா அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளது. இதனால் இலங்கையில் உடனடியாக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.
புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆதரித்து வரும் ரணில், சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளுடன் அரசு இணைந்து செயல்படுவதை ஆதரித்து வருகிறார். அதேபோல சுனாமி நிவாரணம் தொடர்பாக புலிகள்-அரசுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், சந்திரிகா அரசை கவிழ்க்கும் ஜேவிபியின் திட்டத்தை தமிழ் தேசியக்கூட்டணியும் முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது.
புலிகளின் ஆதரவு பெற்ற இந்தக் கூட்டணியின் எம்பிக்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பர். இந்தக் கூட்டணிக்கு 22 எம்பிக்கள் உள்ளனர்.
மொத்தம் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் சந்திரிகாவின் கூட்டணக்கு 116 இடங்கள் இருந்தன. இதில் 39 இடங்கள் ஜேவிபி வென்றஇடங்களாகும். 14 மாதங்களாக இந்தக் கட்சி சந்திரிகாவுக்கு ஆதரவு அளித்து வந்தது.
சந்திரிகா அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து ஜேவிபியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கே கூறுகையில், அதிபர் சந்திரிகா தனது முடிவை வாபஸ்பெறாததால் ஜேவிபி தனது ஆதரவவை வாபஸ் பெற்றுக் கொள்கிறது.
எங்களது 39 உறுப்பினர்களும் எதிர்க் கட்சி வரிசையில் அமருவார்கள். மேலும் சந்திரிகா அரசிலுள்ள எங்களது 4 அமைச்சர்களும் விரைவில் பதவியை ராஜினாமாசெய்வார்கள். அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் உறுதி செய்வதாக சந்திரிகா உறுதியளித்தால், மீண்டும் அக் கட்சியுடன் புதிதாககூட்டணி அமைக்கவும் தயாராகவே உள்ளோம். சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகள் சேருவதால் எந்த அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications