ராமதாஸ் சொல்வது ஆச்சரியமாக உள்ளது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நுழைவுத் தேர்வு பிரச்சினையில் எனது கருத்துக்கும், தனது கருத்துக்கும் உடன்பாடு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ்சொல்லியிருப்பது வியப்பாக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நுழைவுத் தேர்வு ரத்து, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து போன்றவைகள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியவை என்றபோதிலும், இந்த அரசின் முன் யோசனையைற்ற செயலால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் மாணவர்கள் கண்ணீர் சிந்தவேண்டியுள்ளது என்று நான் தெரிவித்த கருத்து 15-6-2005 அன்று முரசொலியில் வெளிவந்தது.

ஆனால், நான் நுழைவுத் தேர்வும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் வேண்டுமென்று சொன்னது போலவும், அது தனக்கு உடன்பாடானகருத்து அல்ல என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.

நாங்கள் இரண்டு பேருமே நுழைவுத் தேர்வு, இம்ப்ரூவ்மென்ட் தேர்வு குறித்து அடிப்படையில் ஒரே விதமான உடன்பாடுடையகருத்து உடையவர்கள் தான்.

ஆனால், திருக்குறளில் காலம் அறிதல் எனும் அதிகாரத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ஏற்ற காலத்தையும், அறிந்து செய்யவேண்டும் என்ற கருத்துக்கு நான் மதிப்பளிப்பது அடிப்படை கருத்துக்கு மாறாபாடன ஒன்றாகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திமுக கூட்டணியில் உளவுப் பிரிவு போலீசார் மூலமாக குழப்பம் விளைவிக்க ஆளும் தரப்பு தீவிரமாக உள்ள நிலையில்ராமதாஸ்-கருணாநிதி இடையிலான இந்த வெளிப்படையான அறிக்கை-பேட்டி மோதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+