நுழைவுத் தேர்வு: கருணாநிதி கருத்தில் உடன்பாடு இல்லை - ராமதாஸ்
திண்டிவனம்:
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நேரம் சரியில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாதுஎன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ள சிலர் அது ரத்து செய்யப்பட்ட நேரம், விதம் சரியில்லை என்கிறார்கள்.இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இது பொருத்தமற்ற வாதமாகும். இதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக கருணாநிதிதெரிவித்துள்ள கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை.
நுழைவுத் தேர்வு என்பது சமூகத்தில் வசதி படைத்தவர்கள், பண வசதி படைத்தவர்களுக்குத் தான் பலனைக் கொடுத்து வந்தது.ஏற்கனவே முன்னேறியவர்கள் இன்னும் முன்னேறவே இது வாய்ப்பைக் கொடுத்தது.
சரி, இப்படிப் படித்து வந்தவர்கள் சமுதாயத்திற்குப் பயனாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அரசு மருத்துவக்கல்லூரிகளில் சலுகைகள் மூலம், படித்த டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மறுப்பதால் இன்றும் மருத்துவ வசதிகிடைக்காமல் பல நூறு கிராமங்கள் சிரமப்பட்டு வருகின்றன. இனி அந்த நிலை மாறும்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் படிப்பவர்கள் வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் தான். இவர்களுக்குதனி சலுகை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இவர்கள் எல்லாம் தமிழில் படிப்பதை கெளரவக் குறைச்சல் என்றுஎண்ணி ஆங்கிலத்தில் படிக்கும் பிள்ளைகள். இப்படிப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பதை அரசு ஏற்கவே கூடாது.
இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவான பாடத்திட்டத்தை, கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications