ஏர்-இந்தியாவின் டெல்லி-லண்டன் முதல் விமானம்
டெல்லி:
டெல்லி-லண்டன் இடையே ஏர்-இந்தியாவின் முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. டாக்கா வழியாக செல்லும் இந்தவிமானத்தை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அகமது தொடங்கி வைத்தார்.
முதல் விமானப் போக்குவரத்தை தொடங்கி வைத்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது கூறுகையில்,டெல்லி-லண்டன் விமானம் ஏர்-இந்தியாவின் நற்பெயருக்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளது.
தற்போது இந்த விமானம் வாரம் ஒரு இயக்கப்படுகிறது. விரைவில் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதியவிமான சர்வீஸ் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மேலும் வலுப்படும் என்றார்.
தொடக்க விழாவில் கலந்து கொண்ட வங்காள தேச தூதர் மசூது கூறுகையில், இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில்இருந்து ஏராளமானோர் சுற்றுலாவுக்காகவும், வியாபாரத்திற்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பயணம் செய்கின்றனர்.இவர்களுக்கு இந்த விமானம் பெரும் பயனளிப்பதாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஷியாம் சரண், ஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குனர் துளசிதாஸ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது, கடந்த 3 மாதங்களில் ஏர்-இந்தியா நீண்ட தூரத்திற்கு இயக்கும் 3வது விமானமாகும். டெல்லி-பிராங்க்பர்ட்-லாஸ் ஏஞ்சல்ஸ்,டெல்லி-அமிர்தசரஸ்-பர்மிங்ஹாம் ஆகிய நீண்ட தூர விமானங்கள் சமீபத்தில் இயக்கி வைக்கப்பட்டன.
பறவை மோதியதால் பரபரப்பு:
இந்தூர் தேவி அகல்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 38 பயணிகள் இருந்தனர்.
ஓடுபாதையிலிருந்து விமானம் கிளம்பும் நேரத்தில் அந்த விமானத்தின் மீது ஒரு பறவை வேகமாக வந்து மோதியது.இதில் சிறிதுநிலைதடுமாறிய அந்த விமானம், பிறகு புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் இந்தூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் விமானத்திற்கு எந்தபாதிப்பும் இல்லை என்றும் 38 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் இந்தூர் விமான நிலைய இயக்குனர் நடால் தெரிவித்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |