அமைதியாக நடந்து முஐந்த கண்டதேவி கோவில் தேரோட்டம்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கிராமத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்தேரோட்டம் நடந்தது. தலித் சமுதாயத்தினரும் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் கடந்த 1998ம் ஆண்டு உத்தரவிட்டும் கூட அது சரியாகஅமல்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்ச்சியில் தலித் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் பங்கேற்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குஉயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி. தலைமையில் 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
7 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போலீஸார் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 5 சப் கலெக்டர்கள், 8வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் தேரோட்ட நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டனர்.
கலவரத்தில் ஈடுபட யாராவது முயன்றால் அவர்களை விரட்டியடிப்பதற்காக ஆங்காங்கே கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் வாகனங்களும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
வரலாறு காணாத இந்த பலத்த பாதுகாப்புடன் கண்டதேவியில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. பிற்பகல் 2.15மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தலித் சமுதாயத்தினரும் சேர்ந்து தேரை வ டம் பிடித்து இழுத்தனர்.
சரியாக 45 நிமிடங்களில் அதாவது 3 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. எந்த வித அசம்பாவித சம்பவமும்நடைபெறாம் தேரோட்டம் நடந்து முடிந்தது அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீஸாருக்கும்,அதிகாரிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |