சிவகங்கை கலெக்டர் மீது வழக்கு- கிருஷ்ணசாமி அறிவிப்பு
சென்னை:
கண்டதேவி தேரோட்ட விழாவின்போது, உயர் நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையில் தாழ்த்தப்பட்டமக்களை தேர் இழுக்க அனுமதிக்காத சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் மீது தீண்டாமைஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப் போவதாக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
கண்டதேவி தேரோட்ட விழாவின்போது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல், உயர் நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.
தேரோட்டத்தின்போது வடம் பிடித்து தேரை இழுக்க தாழ்த்தப்பட் சமுதாயத்தினர் அனுமதிக்கப்படவில்லை.தாழ்த்தப்பட்ட மக்கள் தேரோட்டம் நடந்த பகுதிக்கு வர விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்தச் செயல்பாடுகள், கடும் கண்டனத்துக்குரியவை. அவர் மீது தீண்டாமைஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், ஜூலை 4ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தவும், ஆளுநரிடம் மனுகொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
கண்டதேவி தேரோட்டத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்களை வடம் பிடித்து இழுக்க அனுமதிக்காததைக் கண்டித்துநாளை முதல் 7 நாட்கள் கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications