கார் இறக்குமதி: கலாநிதி மாறனுக்கு பெரும் வரி சலுகை- வழக்கு போடுகிறார் சு.சுவாமி
சென்னை:
தமிழகத்தில் செய்தித் தொடர்புத்துறையில் சன் டிவி குழுமம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதாகவும், இதை எதிர்த்துவழக்குத் தொடரப் போவதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
தென் இந்தியாவில் 12 டிவி சேனல்களுடன் முன்னணி டிவி நிறுவனமாகத் திகழ்ந்து வரும் சன் டிவி சமீபத்தில் தினகரன்நாளிதழை விலைக்கு வாங்கியுள்ளது. இது பத்திரிக்கை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் தமிழக ஜனதா கட்சித் தலைவரான சந்திரலேகா சகிதமாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய சு.சுவாமிகூறியதாவது:
தமிழ்நாட்டில் செய்தித் துறையில் சன் டிவி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசில்தகவல்-தொழில்நுட்பத்துறையை கையில் வைத்துள்ள திமுக அதன் மூலமாக சன் டிவிக்கு ஏராளமான வசதிகளை செய்து தந்துவருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மோனேபோலியாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது சன் டிவி. இது 2002ம் ஆண்டுநிறைவேற்றப்பட்ட காம்படிடிவ் ஆக்ட் சட்டப்படி தப்பு. இதனால் மத்திய சர்க்கார் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கலாநிதி மாறனுக்கு வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் இந்தகாருக்கு ரூ. 87 லட்சம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ஆனால், மத்தியில் உள்ள திமுகவைச் சேர்ந்த நிதித்துறைஇணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிட்டு வரியைக் குறைத்துள்ளார்.
இதனால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை நான் விட மாட்டேன். கேஸ் போடுவேன் என்றார் தனது வழக்கமானபாணியில் சு.சுவாமி.
முதல்வர் ஜெயலலிதாவின் உ.பி. சகோதரி சசிகலாவின் கணவர் நடராஜனும், அக்காள் மகன் தினகரனும், இப்படித்தான் ஒருலெக்ஸஸ் காரை இறக்குமதி செய்து, சுவாமியிடம் மாட்டி, கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருப்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications