மேலும் 50,000 நெசவாளர்களுக்கு இன்சூரன்ஸ்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக அரசின் நெசவாளர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மேலும் 50,000 நெசவாளர்களைசேர்க்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நெசவாளர் துயர் துடைப்புக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசுஅறிமுகப்படுத்தியது.
இதில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு மத்திய அரசின் பங்காக ரூ. 150, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்(எல்.ஐ.சி) பங்காக ரூ. 100, நெசவாளர்களின் பங்காக ரூ. 130 பிரீமியம் கட்ட வேண்டும்.
நெசவாளர்களின் நலனை முன்னிட்டு அவர்களின் பங்கான ரூ. 130 தொகையை அரசே செலுத்தும் என நான்அறிவித்தேன். இந்த வகையில் கடந்த ஆண்டு 76,096 நெசவாளர்களுக்குரிய பிரீமியம் தொகையான 98 லட்சத்து92,040 ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.
தற்போது இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு, நடப்பாண்டில் கூடுதலாக 50,000 நெசவாளர்களைஇத்திட்டத்தின் கீழ் சேர்க்க உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, இவர்களுக்குரிய பிரீமியம் தொகையான ரூ. 65 லட்சம் மற்றும் ஏற்கனவே உள்ளவர்களுக்கானபிரீமியம் தொகையான 98.92 லட்சத்தையும் அரசே செலுத்தும்.இதன் மூலம் நடப்பாண்டில் 1,26,096நெசவாளர்கள் பயன் பெறுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் இயற்கையாக மரணம் அடையும் உறுப்பினர்களின் குடும்பத்துக்கு ரூ. 50,000 தொகையும்,விபத்தில் இறப்போர் குடும்பத்துக்கு ரூ. 80,000ம் வழங்கப்படும்.
விபத்தில் முழுமையான அளவு காயமடைந்தால் ரூ. 50,000ம், பகுதியளவு காயமடைந்தால் ரூ. 25,000ம்உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.
இதுதவிர, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 9வது வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை அல்லது அதிகபட்சம் 4ஆண்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் (3 மாதங்கள்) ஒரு முறை ரூ. 300 வீதம் வழங்கப்படும். இதுஅவர்களது படிப்புச் செலவுக்காக வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications