சுனாமி நிவாரணம்: புலிகளுடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்து
சுனாமி நிவாரணப்பணிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக இலங்கைபாராளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசுகையெழுத்திட்டது.
இதைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நார்வே வெளியுறவு துணை அமைச்சர் விடார்ஹெல்ஜெசன் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை வந்தார். அவர் முதலில் அதிபர் சந்திரிகாவை சந்தித்துப்பேசினார்.
இதன் பிறகு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனையும் பிறதலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் சந்திரிகா அளித்த வாக்குறுதிகளையும்,யோசனைகளையும் நார்வே அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்செல்வனிடம் விளக்கினார்.
ஆனால், நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வதில் தெளிவான திட்டம் ஏதும் இலங்கை அரசிடம்இருந்து கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால் அப்போது இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பில்கூறப்பட்டது.
இது குறித்து தமிழ்செல்வன் விடுத்த ஒரு அறிக்கையில், ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில்கையெழுத்திடும்படி அதிபர் சந்திரிகா கூறுகிறார். இப்போதும் அதையே வலியுறுத்துகிறார். அது மட்டும்போதுமானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில் சுனாமி நிவாரண ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது. இது குறித்துஇலங்கை அமைச்சர் மைத்ரிபாலா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் இணைந்து னாமி நிவாரணப் பணிகளில்ஈடுபடுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ரகளை:
இலங்கை அரசின் மறுவாழ்வுத் துறை அமைச்சர் ஜெயசிங்கே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதற்கான ஆவணங்களுடன் நார்வே தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகளை சந்திக்க கிளிநொச்சிசென்றுள்ளனர்.
அவர்கள் இதில் கையெழுத்திட்ட உடன் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையழுத்திட்டதற்கு இலங்கைபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர்களை பேசவிடாமல்ஜேவிபி கட்சி உறுப்பினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் பாராளுமன்றத்தில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஜூலை 5ம் தேதி வரை பாராளுமன்றம்ஒத்தி வைக்கப்பட்டது.
புலிகளுடனான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டது குறித்து அறிந்த ஜேவிபி கட்சித் தொண்டர்கள்பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிவிரட்டியடித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications