சேது சமுத்திரம்: ராமேஸ்வரத்தில் புதிய கலங்கரை விளக்கம்
ராமேஸ்வரம்:
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமேஸ்வரம் அருகே ஓலை குடா தீவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் பிரமாண்டமான கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்திற்குப் பின்னர் சேது கால்வாயில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக இப்போதே கலங்கரைவிளக்கங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
ராமேஸ்ரம் அருகே ஓலை குடா பகுதியில் புதிதாக ரூ. 50 லட்சம் மதிப்பில் பிரமாண்டமான கலங்கரை விளக்கம்அமைக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரத்தில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 மைல் தூரத்திற்கு ஒளி வீசும் வகையில் பிரகாசமான விளக்குகளும் இந்த கலங்கரை விளக்கத்தில்பொருத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே ராமேஸ்வரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. அதேபோல கீழக்கரை, தொண்டி ஆகிய இடங்களிலும்கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இப்போது கூடுதலாக ஒரு கலங்கரை விளக்கம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.விரைவில் இது திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழகத்திலேயே அதிக கலங்கரை விளக்கங்கள் உள்ள மாவட்டம் ராமநாதபுரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications